கோவை பொதுமக்கள் குறைகள், சேவைகள் குறித்து புகார் தெரிவிக்க மாநகராட்சி தொலைபேசி எண்கள் வெளியீடு!

கோவை: கோவை பொதுமக்கள் மாநகராட்சி சேவைகள் குறித்த தங்களது குறைகள், புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்களும் சமூக வலைதள முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளன.



கோவை: கோவை பொதுமக்கள் மாநகராட்சி சேவைகள் குறித்த தங்களது குறைகள், புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்களும் சமூக வலைதள முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில்‌ வசிக்கும்‌ பொதுமக்கள்‌ தங்களது குறைகளை தெரிவிப்பதற்காகவும், கொரோனா தடுப்பு குறித்து கட்டுப்பாடு அறைக்கு புகார் தெரிவிக்கும் வழி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கொரோனா தொற்று காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆலோசனை கூறவும், நடமாடும்‌ காய்கறி வாகனங்களில்‌ அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்தால்‌ புகார்‌ தெரிவிக்கவும்‌ புதிய முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்கவும், சேவைகளைப் பெறவும் கீழ்க்கண்ட தொலைபேசி எண்கள் மற்றும் முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம்‌ போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக மாநகராட்சியைத் தொடர்பு கொள்ளலாம்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில் வழங்கப்படும் கொரோனா தொற்றுதடுப்பு சேவைகள் குறித்து ப்புகார் தெரிவிக்க 18004255019 (Toll Free) என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இது தவிர கொரோனா கட்டுப்பாட்டு அறையை 9750554321 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்‌ 0422-4585800 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.

பிற ஆலோசனைகள் மற்றும் காய்கறி வாகனங்கள்‌ தொடர்பான புகார்‌கள் அளிக்க 9750554321 வாட்ஸ்‌ ஆப்‌ ஹெல்ப்‌ லைன்‌ (கோவிட்‌) உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

பொதுவான புகார்கள் தெரிவிக்க 8190000200 வாட்ஸ்‌ ஆப்‌ மூலம்‌ தொடர்பு கொள்ளலாம்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ அதிகார்வபூவ வலைதள பக்கங்களான முகநூல்; https://www.facebook.com/CoimbatoreCorporation

டிவிட்டர்; Coimbatore Corporation (Official) https://twitter.com/CbeCorp என்ற பக்கத்திலும், இன்ஸ்டாகிராம் பக்கம்; Coimbatore Corporation https://www.ccmc.gov.in/ccmc/ என்ற பக்கத்திலும் தொடர்பு கொள்ள வேண்டும்.

Newsletter