கோவை உட்பட தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில். டீக்கடை, வீட்டு உபயோகப்பொருட்கள், ஜெராக்ஸ் கடை வீடியோ கடை, காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்பட தமிழக அரசு அதிரடி உத்தரவு... மக்கள் மகிழ்ச்சி

கோவை: கோவை உட்பட தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில். டீக்கடை, வீட்டு உபயோகப்பொருட்கள், ஜெராக்ஸ் கடை வீடியோ கடை, காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்பட தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



கோவை: கோவை உட்பட தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில். டீக்கடை, வீட்டு உபயோகப்பொருட்கள், ஜெராக்ஸ் கடை வீடியோ கடை, காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்பட தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சற்று முன்பு தமிழக அரசு சிறப்புத் தளர்வுகளுடன் கூடிய ஒரு ஊரடங்கை அறிவித்தது. அதன்படி, கொரோனா பாதிப்பு முதலிடத்தில் இருக்கக்கூடிய பல்வேறு மாவட்டங்களுக்கு டீக்கடைகள், வீடியோ. ஜெராக்ஸ் கடைகள், மின்சாதனப் பொருட்கள் கடைகள், வீட்டு உபயோகக் கடைகள் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. பஸ் போக்குவரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதன் விவரம் வருமாறு:

கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாகை, திருச்சி, தஞ்சை, திருப்பூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் டீக்கடைகள், வீட்டு உபயோக மின்சார கடைகள், போட்டோ, வீடியோ, ஜெராக்ஸ் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கலாம்.

23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி.

23 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கடைகள் இயங்க அனுமதி.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 50 சதவிகித பணியாளர்களுடன் ஜவுளிகடைகள் திறக்க அனுமதி.

4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கும், வணிக வளாகங்களுக்கும், உணவகங்களில் பார்சல்களுக்கும் அனுமதி.

11 மாவட்டங்களில் தியேட்டர்கள் வட்டாட்சியர் அனுமதி பெற்று பராமரிப்பு பணி செய்யலாம்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய 4 மாவட்டங்களில் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க நிறுவனங்களுக்கு அனுமதி.

11 மாவட்டங்களில் 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

23 மாவட்டங்களில் திருமண இ பதிவு தேவையில்லை.

23 மாவட்டங்களில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

27 மாவட்டங்களில் திருமணம் சார்ந்த போக்குவரத்திற்கு இ பதிவு இல்லாமல் பயணிக்கலாம்.

27 மாவட்டங்களில் கடற்கரையில் நடைபயிற்சிக்கு அனுமதி.

11 மாவட்டங்களில் உள்ளவர்கள் மட்டும் பிற மாவட்ட திருமணத்திற்கு செல்ல இ பதிவு பெற்றிருக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...