கோவை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிகமாக துணை சுகாதார/நகர சுகாதார செவிலியர்கள்‌ நியமிக்கப்பட உள்ளனர்‌

கோவை: கோவை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 20 தற்காலிகமாக துணை சுகாதார/நகர சுகாதார செவிலியர்கள்‌ நோகாணல்‌ மூலம்‌ நியமிக்கப்பட உள்ளனர்‌.


கோவை: கோவை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 20 தற்காலிகமாக துணை சுகாதார/நகர சுகாதார செவிலியர்கள்‌ நோகாணல்‌ மூலம்‌ நியமிக்கப்பட உள்ளனர்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ செயல்பட்டுவரும்‌ நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ உள்ள துணை சுகாதார நிலையங்களில்‌ 20 தற்காலிகமாக துணை சுகாதார/நகர சுகாதார செவிலியர்கள்‌ நோகாணல்‌ மூலம்‌ நியமிக்கப்பட உள்ளனர்‌. அவர்களுக்கு மாதம்‌ ரூ.11,000/-ம்‌ தொகுப்பூதியம்‌ வழங்கப்படும்‌.

தகுதியுடைய நபர்கள்‌ குறைந்தபட்சம்‌ கல்வி தகுதி B.Sc Nursing, Diploma Nursing Midwife (GNM) / Auxiliary Nurse-Midwife (ANM) ஆகிய ஏதேனும்‌ ஒரு படிப்பில்‌ தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு செவிலியர்‌ மற்றும்‌ தாதியா்‌ குழுமத்தில்‌ (Tamilnadu Nurses and Midwifes Council) அவசியம் பதிவு செய்திருத்தல் வேண்டும். 03.07.2021 காலை 10.00 மணிக்கு கீழ்க்காணும்‌ அனைத்து அசல்‌ மற்றும்‌ ஒரு நகல்‌ ஆவணங்களுடன்‌ இணைப்பில்‌ கண்டுள்ள படிவத்தில்‌ பூர்த்தி செய்து டவுன்ஹால்‌ அருகில்‌ அமைந்துள்ள கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ நேரில்‌ ஆஜராகுமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ தெரிவித்துள்ளார்கள்‌.

1. கல்விச் சான்றிதழ்கள்‌

2. இருப்பிடச் சான்று

3. சாதிச்‌ சான்று

4. ஆதார் அட்டை

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...