நான்கு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி விமானம் மூலம் சென்னை வந்தது..!

கோவை: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக, நான்கு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி விமானம் மூலம் சென்னை வந்தது. இனி தினம் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


கோவை: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக, நான்கு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி விமானம் மூலம் சென்னை வந்தது. இனி தினம் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு படிப்படியாகக் குறைந்து கொண்டுள்ள நிலையில், தொடர்ந்து தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி தடுப்பூசி கேட்டவண்ணம் இருந்தது. இந்தநிலையில் மூன்றாம் கட்டமாக ஏழு லட்சம் தடுப்பூசி அனுப்புவதாக மத்திய அரசு கூறியிருந்ததது. இந்தநிலையில் இன்று புனேயில் இருந்து விமானம் மூலமாக, நான்கு லட்சம் தடுப்பூசிகள் சற்று முன்பு சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இனி தினந்தோறும் தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் மூன்றாம் அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது.

நாளொன்றுக்கு இரண்டு லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்கிறார்கள். ஆனால், தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால், சில இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கும் தடுப்பூசி போதுமானதாக இல்லை என்றும், அவ்வப்போது மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகள் ஒரு நாள் தேவையையே பூர்த்தி செய்யவில்லை என்றும் தமிழக அரசு கூறி வருகிறது.

இதனால், தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஜூன் மாதத்திற்கு 42 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கிய மத்திய அரசு கூடுதலாக ஏழு லட்சம் தடுப்பூசிகளை வழங்கியது. ஜூலை மாதத்திற்காக 71 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ளது.

இந்தநிலையில், புனேவில் இருந்து நான்கு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக 34 பார்சல்களில் தடுப்பூசி வந்தடைந்தது. அவை குளிர்சாதன வாகனம் மூலம் பெரியமேட்டில் உள்ள மருத்துவ கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி சென்னை வந்ததையொட்டி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...