தளர்வுகள் கிடைத்தாலும் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்... கோவை கலெக்டர் அறிவுறுத்தல்..!

கோவை: கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்ததைத் தொடர்ந்து, தளர்வுகள் கிடைத்தாலும் கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் என கோயம்பத்தூர் மாவட்ட கலெக்டர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்ததைத் தொடர்ந்து, தளர்வுகள் கிடைத்தாலும் கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் என கோயம்பத்தூர் மாவட்ட கலெக்டர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.

கோவையில் ஊரடங்குத் தளர்வுகளை அரசு வழங்கியிருந்தாலும் பொதுமக்கள் அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அவசியம் கடைபிடித்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அரசு அறிவித்த வழிகாட்டுதல்களை, அனைவரும் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என, கலெக்டர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை: ‘‘பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, மளிகை, காய்கறி கடைகளுக்கு கூடுதல் நேரம், அரசு, தனியார் பொருட்காட்சிகளுக்கு அனுமதி, ஹோட்டல்கள், டீக்கடைகள், பேக்கரிகளில், 50 சதவிகித வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி, துணிக்கடைகள், நகைக்கடைகளுக்கு அனுமதி என, பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

தளர்வுகள் வழங்கப்பட்டாலும், அரசு வழிகாட்டுதல்களை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் தேவையில்லாமல் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில், அத்தியாவசிய செயல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.'' என்று அவர் கூறியுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...