கூடலூரில் நீரோடை அகலப்படுத்துவதில் இருதரப்பினரிடையே மோதல் - அதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்கு பிறகு பணிகள் நடைபெற்றன

கூடலூர் அருகே உள்ள நாடுகாணி பகுதியில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றுவதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏராளமான போலீசார்கள் வரவழைக்கபட்டு பேச்சுவார்த்தைக்கு பின்னரே நீரோடை அகலப்படுத்தும் பணியானது நடைபெற்றது.



கூடலூர் அருகே உள்ள நாடுகாணி பகுதியில் உள்ள நீரோடை ஆக்கிரமிக்கபட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. மேலும் மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து குடியிருப்புகளில் புகுந்து மக்களின் வாழ்வாதாரம் திண்டாடுவது வழக்கமாக உள்ளது.

இதனை சரி செய்ய அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீரோடையை அகலப்படுத்தும் முடிவை மாவட்ட நிர்வாகம் எடுத்தது.



அதற்கான பணிகளை தொடங்கி மாவட்ட நிர்வாகம் நில அளவையில் செயல்பட்ட போது நீரோடையை ஒட்டி உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அப்பகுதி முழுக்க பெரும் பரபரப்பு நீடித்தது.



இச்சம்பவத்தை கருத்தில் கொண்ட மாவட்ட நிர்வாகம் நீரோடையை அகலப்படுத்தும் பணியை தற்காலிகமாக நிறுத்தியது.



பின்னர் இதனை அடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் வரவழைக்கபட்டதுடன் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் முன்னிலையில் இரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் நீரோடை பகுதியில் புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்ற இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.



பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் பிரச்சனைக்குரிய பகுதியில் நில அளவை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆற்றின் இரு புறங்களிலும் நீரோடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அகலப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...