கோவை தெலுங்குபாளையம் அருகே பேருந்தில் நீதிமன்ற பெண் ஊழியரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருச்சி பெண் கைது..!

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலக பெண் பணியாளர் ஹேமலதாவிடம் ஓடும் பேருந்தில், 5.5 சவரன் தங்க நகையை பறிக்க முயன்ற திருச்சியை சேர்ந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹேமலதா (40). இவர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கம் போல பணி முடிந்து ஹேமலதா தனியார் பேருந்தில் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது பேருந்து குப்புசாமிநாயுடு மருத்துவமனை நிறுத்தம் அருகே வந்த போது பேருந்தில் வந்த மற்றொரு பெண் திடீரென ஹேமலதா அணிந்திருந்த 5.5 சவரன் செயினை பறித்துக கொண்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.

இந்நிலையில், ஹேமலதா சத்தம் போடவே, அங்கிருந்த பொதுமக்கள் அந்த பெண்ணை மடக்கி பிடித்து பந்தைய சாலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.



இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட பெண் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கவுரி என்பதும், இவர் குழுவாக செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும் இந்த பெண் பல்வேறு பெயர்களில் சுற்றித் திரிந்ததோடு இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஓடும் பேருந்தில் நீதிமன்ற பெண் ஊழியரின் தங்க நகையை மற்றொரு பறித்துக் கொண்டு தப்பிச்செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...