நீலகிரியில் இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி - கூண்டு வைத்து பிடித்த வனத்துறை

மஞ்சூர் பகுதியில் இரவு நேரங்களில் உணவு தேடி வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்த நிலையில், முக்குருத்தி தேசிய பூங்கா வனப்பகுதியில் கரடியை விடப்பட்டது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் கடந்த சில மாதங்களாக கரடி ஒன்று சுற்றித்திரிந்து வந்தன. பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களுக்குள் சென்று தூங்கும் அந்த கரடி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகள் மற்றும் கடைகளின் கதவு, ஜன்னல்களை உடைத்து உணவு பொருட்களை உண்டு சேதப்படுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் மஞ்சூர் பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் இருந்து வந்த நிலையில், அந்த காரடியை பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து,கரடியின் நடமாட்டம் இருக்க கூடிய பகுதிகளை கண்டறிந்த வனத்துறையினர், கரடியை பிடிப்பதற்காக கடந்த வாரம் கூண்டு வைத்திருந்தனர்.

அந்த கூண்டில் இன்று அதிகாலை கரடி சிக்கியதை அடுத்து கரடியை அருகில் உள்ள முக்குறுதி தேசிய பூங்கா வனப்பகுதிக்குள் கொண்டு சென்று திறந்து விட்டனர். கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...