கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை நண்பர்களுடன் கம்பால் அடித்தே கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டில், சித்திரைவேல் என்பவரை கள்ளக்காதல் தொடர்பான பிரச்சனையில், நண்பர்களுடன் இணைந்து ராஜன் என்பவர் கட்டையால் அடித்து கொன்ற வழக்கில் ராஜன் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.


கோவை: தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் சித்திரைவேல். இவர் கோவை ஒண்டிப்புதூரில் தங்கி கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதே பகுதியில், அவருடைய அண்ணன் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், வெள்ளலூரைச் சேர்ந்த ராஜன் என்பவருக்கு சித்திரவேலின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனால் சித்திரைவேலின் மனைவி தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு, கள்ள காதலன் ராஜனுடன் சென்று தனியாக வசித்து வந்துள்ளார்.

இதனால், சித்திரைவேல் வெள்ளலூருக்கு சென்று ராஜனை தட்டிக் கேட்டுள்ளார். இதை தொடர்ந்து, அவருடைய மனைவி மனம் திருந்தி ராஜனை விட்டு பிரிந்து சித்திரவேலுடன் மீண்டும் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த ராஜன் தனது கள்ளக் காதலுக்கு சித்திரைவேல் இடையூறாக இருப்பதாக கருதி, தனது கூட்டாளிகளுடன் சென்று கடந்த 17.5.2020 ஆம் ஆண்டு அன்று வீட்டில் இருந்த சித்திரைவேலை தடியால் அடித்து கொலை செய்தனர்.

இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் கொலை வழக்குபதிவு செய்து. ராஜன் அவருடைய கூட்டாளிகள் அரவிந்த், குமார், செல்வகுமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணையானது, கோவை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ராஜன் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...