கோவை கார் வெடிப்பு குறித்து அவதூறு பதிவு-கிஷோர்.கே.சாமியை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் மனு

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் அவதூறாக பதிவு செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள கிஷோர்.கே.சாமியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் மனு.


கோவை: கோவையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் சதி திட்டம் தீட்டியது தனிப்படையினர் நடத்திய விசாரணையில் அம்பலமானது.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபினின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர் உடலை அடக்கம் செய்ய முயன்றபோது ஜமாத்துகள் முன்வரவில்லை.

அமைதியை விரும்பும் ஜமாத்துகள் அசம்பாவிதம் செய்ய முயன்ற நபரை அடக்கம் செய்ய முதலில் மறுத்திருக்கின்றனர். பின்னர் மனிதாபிமான அடிப்படையில் முபின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் முபின் உடலை அடக்கம் செய்ய மறுத்தது குறித்து தகவல் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் அதனை ரீ டுவிட் செய்த கிஷோர் கே சாமி குண்டு ஒழுங்காக வைக்க தெரியாத நபரை ஜமாத்துக்கள் எப்படி அடக்கம் செய்வார்கள் என்ற பொருளில் பதிவு செய்திருந்தார்.

கிஷோர் கே சாமியின் இந்த பதிவு இந்து - முஸ்லீம் இடையே பிரச்சினையை தூண்டி விடும் வகையில் இருந்தது. இதனையறிந்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் கிஷோர்.கே.சாமி, மீது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட குற்றத்துக்காக இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 153-ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

153 IPC - கலகம் செய்வதற்குத் தூண்டி விட்டு அதனால் கலகம் ஏற்பட்டால் அந்தக் கலகத்தைத் தூண்டியவருக்கு ஓர் ஆண்டுக்கு மேற்படாத சிறைவாசம் அல்லது அபராதம் அல்லது சிறைவாசம் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

இந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள கிஷோர்.கே.சாமியை கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி சரவண பிரபு முன்பாக ஆஜர்படுத்தி அவரை 2 நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல் செய்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...