அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின்: கோவை மாவட்ட திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற நிலையில் வடகோவை திமுக அலுவலகம் முன்பு காந்திபுரம் பகுதி செயலாளர் ஆர்.எம்.சேதுராமன் தலைமையில் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.



கோவை: திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதை திமுகவினர், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு அரசியல் பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை வடகோவை பகுதியில் உள்ள திமுக அலுவலகம் முன்பு காந்திபுரம் பகுதி செயலாளர் ஆர்.எம்.சேதுராமன் தலைமையில் கோவை மாவட்ட திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



கடந்த 3 ஆண்டுகளாக திமுகவின் இளைஞரணி செயலாளராக செயல்பட்டு வந்த உதயநிதி ஸ்டாலின், கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...