உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியது தான் திமுக ஆட்சியின் சாதனை - கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேசிய எஸ்.பி. வேலுமணி, திமுக கூட்டணி கட்சிகள் எந்த மக்கள் பிரச்சினைக்கும் குரல் கொடுப்பதில்லை என்றும், திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.



கோவை: சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து, கோவை மாவட்ட அதிமுக சார்பில் ஜனவரி 3, 5 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது, ஒன்றரை ஆண்டுகளில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியது தான் திமுக ஆட்சியின் சாதனை. மு.க.ஸ்டாலின் எதை செய்ய மாட்டேன் என்று சொன்னாரோ அதைத்தான் செய்வார்.

கொரோனா காலத்தில் எடப்பாடி பழனிசாமி மதுக்கடைகளை மூடினார். கொரோனா காலத்தில் ஸ்டாலின் மதுக்கடைகளை திறந்தார். எனது மகன், மருமகன் அரசியலுக்கு வரமாட்டார்கள் என ஸ்டாலின் சொன்னார். படிப்படியாக கொண்டு வந்து உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் செய்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் மிட்டா மிராசுகள் இருந்ததால், அண்ணா திமுகவை ஆரம்பித்தார். ஆனால் காங்கிரசை விட திமுக மோசமாக உள்ளது. திமுகவை குடும்ப சொத்தாக மாற்றிவிட்டார்கள். கருணாநிதி கூட ஸ்டாலினுக்கு இறுதி வரை பதவி கொடுக்காமல் வைத்திருந்தார்.

ஆனால், உதயநிதி ஸ்டாலினுக்கு வேகமாக பதவி கொடுக்கிறார்கள். ஸ்டாலினுக்காக வைகோவை கட்சியில் இருந்து நீக்கினார்கள். ஆனால் வைகோ தற்போது எதுவும் பேசவில்லை.

திமுக கூட்டணி கட்சிகள் மக்கள் பிரச்சனைகள் எதற்கும் குரல் கொடுப்பதில்லை. திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மகனுக்கு பட்டாபிஷேகம் செய்ததே திமுக ஆட்சியின் சாதனை. ஏன் திமுகவிற்கு வாக்களித்தோம் என மக்கள் நினைக்கின்றனர்.

ஊடகங்கள் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்த வரலாறை போடுவது நியாயமா? ஊடகங்கள் கைவிட்டால் திமுக ஆட்சி போய்விடும். எதுவும் செய்யாத ஒரே முதலமைச்சர் என்றால் அது ஸ்டாலின் தான்.

அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக. திமுகவின் ஒரே நோக்கம் கொள்ளையடிப்பது மட்டுமே. அதிமுக ஆட்சியில் நடந்த போராட்டங்களில் பாதி கூட, திமுக ஆட்சியில் நடப்பதில்லை.

எந்த கொம்பனும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும். இந்த கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் நன்றாக இருக்க முடியாது. திமுக ஐடி விங்க் அதிமுக தலைவர்களை, எம்.எல்.ஏ.க்களை டேமேஜ் செய்கிறார்கள். சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராமன் திமுகவிற்கு செல்வதாக திமுக ஐடி விங்க் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

இந்த கட்சியில் இருந்து அனுபவித்து விட்டு சென்றால், அதிமுக கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் தொண்டர்களின் பாவம் சும்மா விடாது. திமுகவை நம்பி செல்வது தற்கொலை செய்து கொள்வது போல தான்.

இவ்வாறு எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...