மத்திய அரசு அமல்படுத்த உள்ள ஜவுளி தொழில் வளர்ச்சிக்கான மானிய திட்டத்தில் ரூ.10 கோடியாக இருக்கும் உச்சவரம்பை ரூ.1 கோடியாக குறைக்க வலியுறுத்தி சிறு, குறு, நடுத்தர தொழில் துறை செயலரிடம் பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம் கோரிக்கை மனு.
கோவை: விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது ஜவுளித்தொழில். நாடு முழுவதும் 110 கோடிக்கும் அதிகமான மக்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
ஜவுளி தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உற்பத்தி சார்ந்த முதலீடு திட்டம் (பிஎல்ஐ 2.0) மத்திய அரசு விரைவில் அமல்படுத்த உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான உச்ச வரம்பை குறைக்க வேண்டும் என மத்திய அரசின் எம்எஸ்எம்இ செயலர் ஸ்வைனிடம், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு விரைவில் அமல்படுத்தப்பட உள்ள உற்பத்தி சார்ந்த முதலீட்டு மானிய திட்டத்தில், ரூ.10 கோடி முதல் ரூ.100 கோடி வரை முதலீடு கொண்ட நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 90 சதவீத எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ரூ.10 கோடி முதலீடு செய்யும் நிதிநிலை வசதி இல்லை. குறைந்தபட்சம் ரூ.1 கோடி முதல் அதிகபட்சமாக ரூ.10 கோடி வரை மட்டுமே முதலீடு செய்யும் நிலையில் உள்ளனர்.
இதனால், இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான உச்சவரம்பை ரூ.1 கோடி மற்றும் அதற்கு மேல் என மத்திய அரசு மாற்றியமைத்து அமல்படுத்த வேண்டும். 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கணக்கிட்டு இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும்.
கோவை, திருப்பூர் மாவட்ட தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய ஜவுளித் துறை அமைச்சருடன் இணைந்து திட்டத்தில் உச்சவரம்பை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.