கோவையில் மாதிரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

கோவை தெற்கு தாலுக்காவிற்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாதிரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்த படி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.



கோவை: கோவை ரயில் நிலையம் பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் எதிர்ப்புறம் சுமார் 3.10 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாதிரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் தமிழக முதல்வரால் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.



இந்த திறப்பு விழாவில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிலையத்தை பார்வையிட்டு அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.



அதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சமீரன் கட்டிடத்தை பார்வையிட்டு அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.



இந்நிகழ்வில், தீயணைப்புத்துறை இணை இயக்குனர் சத்தியநாராயணன், மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அண்ணாதுரை உட்பட தெற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...