கோவை கிணத்துக்கடவு அருகே குடும்ப பிரச்சினையில் பெண் டெய்லர் தூக்கிட்டு தற்கொலை - பரபரப்பு..!

கிணத்துக்கடவு ஆதித்யா அவென்யூ பகுதியில் கணவர் சரியாக கவனித்துக் கொள்ளாமல், செலவுக்கு பணம் தராமல் இருந்ததால் மனமுடைந்த பெண் டெய்லர் தூக்கிட்டு தற்கொலை.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள ஆதித்யா அவென்யூ விநாயகர் கோவில் வீதியில் வசித்து வந்தவர் ராதா. இவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு உதகையை சேர்ந்த குணா என்பவருடன் திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவருடன் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இதனிடையே அவர் கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில் பாளையம் பகுதியில் டைலர் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் துணி கடைக்கு வேலைக்கு சென்ற போது அங்கு சுப்பையா என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ராதாவும் சுப்பையாவும் கிணத்துக்கடவு ஆதித்யா அவென்யூ பகுதியில் உள்ள தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக சுப்பையா, ராதாவை சரியாக கவனிக்காமல், செலவுக்கு பணம் தராமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக மனமுடைந்த ராதா நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராதாவின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...