திருப்பூரில் மதிமுக சார்பில் சமத்துவப் பொங்கல் விழா - 5000 பெண்கள் பங்கேற்பு!

திருப்பூரில் மதிமுக சார்பில் 5000 பெண்கள் பங்கேற்ற சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. மதிமுக திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்துகொண்டார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டு சாமுண்டிபுரம் பகுதியில் ஆண்டுதோறும் மதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடுவது வழக்கம். அதன்படி, நேற்று திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மதிமுகவின் மாநகர் மாவட்ட செயலாளருமான நாகராஜ் ஏற்பாட்டில் 25வது ஆண்டு சமத்துவ பொங்கல் விழா சாமுண்டிபுரம் பகுதியில் நடைபெற்றது.



அனைத்து மதத்தை சார்ந்த 5000 பெண்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு சூரிய பொங்கல் வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், மதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.



முன்னதாக சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதனைத் தொடர்ந்து, மதிமுக கொடியினை தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ ஏற்றி வைத்து பொங்கல் விழா தொடங்கிவைத்தார்.



விழாவின் ஒரு பகுதியாக சாமுண்டிபுரத்தை சேர்ந்த புதுமண தம்பதிகளுக்கு மதிமுக சார்பில் பொங்கல் சீர்வரிசைகளோடு புத்தகங்களும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து, பொங்கல் வைத்த பெண்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்த 400க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ,"பொங்கல் போன்ற பண்டிகைகள் தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ சமத்துவ பொங்கல் விழாவை தொடர்ந்து ஊக்குவித்து வரக்கூடிய நிலையில் மதிமுகவின் நிர்வாகிகள் இதுபோன்ற சமத்துவ பொங்கல் கொண்டாடுவது மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது.

சமத்துவ பொங்கல் விழாக்கள் நாட்டின் ஒருமைப்பாட்டை உணர்த்தும். மதிமுக மட்டுமல்லாது அனைத்து இயக்கங்களும் சமத்துவ பொங்கல் விழாவை முன்னெடுத்து கொண்டாட வேண்டும். தொடர்ந்து தமிழகம் மற்றும் தமிழ்நாடு குறித்து ஆளுநர் சர்ச்சை ஏற்படுத்தி வருவது ஆளுநர் சனாதனக் கொள்கைகளோடு செயல்பட்டு வருவதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருப்பதாக குற்றம்சாட்டினார்.

மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பாஜகவின் நிர்பந்தத்தின் காரணமாக அதிமுக அதற்கு ஆதரவு தெரிவித்துவருகிறது. அதிமுகவும் ஒரு திராவிட இயக்கம்தான். ஆனால், தற்போது அதன் நிலைமை என்னவென்பதை தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சிந்தித்து பார்க்க வேண்டும். அதற்கு யார் காரணம் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேலும், கோவையில் உள்ள ஈஷா தியான மையத்தில் யோகா பயிற்சிக்குச் சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும், என்றார்.

Newsletter

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...