முதுமலை புலிகள் காப்பகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்

முதுமலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 20-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் பங்கேற்பு.


நீலகிரி: முதுமலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 20-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் பங்கேற்றன. குறும்பர் பழங்குடியினர் இசை மற்றும் நடனத்துடன் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் உள்ளன. இங்குள்ள வளர்ப்பு யானைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று பொங்கல் வைத்துக் கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் மாயார் ஆற்றில் குளிக்க வைக்கப்பட்டு, அலங்காரங்கள் செய்து உணவு கூடத்திற்கு அழைத்து வரப்பட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.



பின்னர் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர், துணை கள இயக்குநர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சார்பாகத் தனித் தனியாகப் பொங்கல் வைக்கப்பட்டது. பொங்கல் பொங்கியதும் அங்கிருந்த குறும்பர் இன பழங்குடியின மக்கள் தங்களது கலாச்சார இசைக் கருவிகளை இசைத்து நடனமாடினர்.



இதனைக் கண்ட நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், அவர்களின் குடும்பத்தினரும் பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனமாடினர். தொடர்ந்து யானைகளுக்குப் பொங்கல், சாதம், கரும்பு, வெல்லம், ஆப்பிள், தர்பூசணி உள்ளிட்ட பல்வேறு உணவுகள் வழங்கப்பட்டன. அதனை அங்குக் கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இதனிடையே யானைகள் முகாமில் உள்ள விநாயகருக்குக் கோவிலில் பல ஆண்டுகளாக மாட்டுப் பொங்கல் தினத்தன்று யானைகள் பூஜை செய்வதை வழக்கமாக இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு விநாயகர் கோவில் முன் வளர்ப்பு யானைகளை வைத்து பூஜை செய்யாமலும், யானை பூஜைகள் நடைபெறாததும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...