குருடம்பாளையம் ஊராட்சியில் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு முகாம்

கோவை அருகே குருடம்பாளையம் ஊராட்சியில் நடந்த அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு முகாமில் தென்னை கன்றுகள், காய்கறி விதைகள் விநியோகம்.



கோவை: கோவை மாவட்டம் வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் குருடம்பாளையம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு முகாம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.



இதில் வேளாண் வணிகம், வேளாண்மை துணை இயக்குநர் பெருமாள்சாமி ஆலோசனையின்படி குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒட்டுமொத்த கிராம வளர்ச்சி மற்றும் விவசாயிகள் பயன் பெறும் வகையில் பட்டா, சிறு, குறு விவசாயிகள் சான்று, பயிர்க் கடன் மற்றும் கிசான் அட்டை விண்ணப்பம் பெறுதல், வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறையின் சார்பாகத் தென்னை கன்றுகள் வினியோகம், காய்கறி விதைகள் விநியோகம் செய்யப்பட்டதன.

இந்த முகாமில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் திட்ட விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் டி.ரவி தலைமை தாங்கி சான்றிதழ்களை விவசாயிகளுக்கு வழங்கினார். வேளாண்மை அலுவலர் அன்னபூரணி, பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

பெரியநாயக்கன்பாளையம் வேளாண்மை உதவி அலுவலர் மணி அனைவரையும் வரவேற்றார்.



முகாமில் உழவர் சந்தை உழவர் அட்டை வழங்குதல், 2 கோடி வரை கடன் ஏற்பாடு செய்தல் உள்ளிட்டவைகளும் நடைபெற்றது.

இந்த முகாமில் ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம், ஊராட்சி கவுன்சிலர்கள், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வருவாய்த்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, விதை சான்று துறை, வேளாண்மை பொறியியல் துறை, கூட்டுறவுத் துறை, மின்சார துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் திரளாகக் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...