"N" வகை குடும்ப அட்டையினை 2017-ம் ஆண்டுக்கு புதுப்பித்துக்கொள்ள இணையதள முகவரி அறிமுகம்

கோவை மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் எப்பொருளும் வேண்டாதோருக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ளை நிறமுடைய "N" குடும்ப அட்டைகளை 2017ம் ஆண்டுக்கு புதுப்பித்துக் கொள்வதற்கு ஏதுவாக www.tnpds.com என்னும் இணையதள முகவரியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

"N" குடும்ப அட்டைதாரர்கள் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடையில் உள்ள விற்பனை முனையத்தில் தங்களது "N" குடும்ப அட்டையினை பதிவுசெய்துகொள்ளலாம். 

அல்லது, "N" குடும்ப அட்டைதாரர்கள் www.tnpds.com என்ற இணையதள முகவரியின் முகப்பில் "பயனுள்ள இணைப்புகள்" என்ற தலைப்பின் கீழ் காணப்படும் "N" கார்டு புதுப்பித்தல் தாள் என்ற இணைப்பில் "N"  குடும்ப அட்டையை பதிவு செய்த பின்னர் "N" குடும்ப அட்டை 1.1.2017 முதல் 31.12.2017 வரை புதுப்பிக்கப்பட்டுள்ளது என்ற சீட்டு அச்சிட்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த புதுப்பித்தல் ஒப்புகை சீட்டினை "N" குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய குடும்ப அட்டையில் ஒட்டி பராமரிக்கப்பட வேண்டும். இத்தகைய காலநீட்டிப்பு பதிவுச்சீட்டு ஒட்டப்பட்டுள்ள குடும்ப அட்டைகள் மட்டுமே நடைமுறையிலுள்ள குடும்ப அட்டைகளாக கருதப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...