உடுமலையில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் தக்காளி வரத்து அதிகரிப்பால், நகராட்சி தினசரி சந்தையில் தக்காளி விலை கடுமையாகச் சரிந்துள்ளது. 14 கிலோ கொண்ட பெட்டி 300 ரூபாயில் இருந்து 240 ரூபாயாக குறைந்தது.



உடுமலை: உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து அதிகரிப்பால், விலை சரிந்து காணப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி தினசரி சந்தைக்கு, உடுமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் விளைபொருட் களை விற்பனைக்கு கொண்டு வந்து, ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர். கேரளா மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்து விளைபொருட்களை கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த வாரம் தக்காளி விற்பனை அதிகரித்த நிலையில், 14 கிலோ கொண்ட பெட்டி, 300 ரூபாய் வரை விற்பனையானது.



இந்நிலையில், இன்று ஒரு பெட்டி தக்காளி 240 ரூபாய் வரை மட்டுமே விலைபோனது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், 'தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், பிற மாவட்டங்களில் இருந்தும் தக்காளி வரத் தொடங்கியுள்ளது.



உடுமலை சந்தையில், உள்ளூர் வியாபாரிகள் மட் டுமே கொள்முதல் செய்து வருகின்றனர். வரத்து அதிகரிப்பால் தக்காளி மொத்த விற்பனை விலை சரிந்துள்ளநிலையில், சில்லரை வர்த்தகத்திலும், விலை குறைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...