மத்திய பட்ஜெட் ஏமாற்றம் - திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தகவல்

மத்திய பட்ஜெட்டில் பின்னலாடை துறையை ஊக்குவிக்கும் அளவிற்கு அறிவிப்பு ஏதும் இல்லை, பின்னலாடை துறைக்கு ஏமாற்றமான பட்ஜெட் எனத் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தகவல்.



திருப்பூர்: மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னலாடை துறை தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்த்து திருப்பூர் தொழில்துறையினர் காத்திருந்ததாகவும் ஆனால் ஏமாற்றமே மிஞ்சியதாகத் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பட்ஜெட்டில் ஜவுளி துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்த்துக் காத்திருந்த பின்னலாடை துறையினருக்கு இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளதாகத் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து அவர் கூறுகையில், சிறு குறு தொழிலுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது மிகக் குறைந்த அளவு. இதனால் எந்த வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்றும், மூலப்பொருள் விலையை நிலையாக வைக்கப் பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்யப்படும் என எதிர்பார்த்தோம்.

இதேபோல் வங்கி கடன்‌ உதவிகள் குறித்த அறிவிப்புகளை எதிர்பார்த்தோம். ஆனால் இது தொடர்பான எந்த வித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. மேலும் பஞ்சு ஏற்றுமதி தடை தொடர்பாகவோ, பஞ்சு இறக்குமதி வரி தொடர்பாகவோ எந்த அறிவிப்பும் இல்லை என்றும், நூல் விலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அறிவிப்பு இல்லை என்பதும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

பல வருட கோரிக்கையான பின்னலாடை துறைக்குத் தனி வாரியம் தேவை என்பதும் நிறைவேற்றப்படவில்லை என்பதுடன், பின்னலாடைக்கு மகிழ்ச்சி தரும் பட்ஜெட்டாக இல்லை, தொழில் நகரத்தின் முக்கிய கோரிக்கையான தொழிலாளர்கள் குடியிருப்புகள் தொடர்பாக அறிவிப்பு, நிட்வேர் போர்டு அறிவிப்பு போன்றவைகளையும் எதிர்பார்த்திருந்த நிலையில் இது தொடர்பான எந்த அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. ஒட்டு மொத்தமாக இந்த பட்ஜெட் பின்னலாடை துறைக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துள்ளது என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...