உலகம் முழுவதும் 1500 பேருக்கு மைக்ரோ சர்ஜரி லேப் பயிற்சி - கோவை கங்கா மருத்துவமனை சாதனை

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 68 நாடுகளைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு மைக்ரோ சர்ஜரி லோப் பயிற்சி அளித்து கோவை கங்கா மருத்துவமனை புதிய சாதனையை படைத்துள்ளது.


கோவை: கோவை கங்கா மருத்துவமனையில் உள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் உள்ள மைக்ரோ சர்ஜரி லேப், வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் உள்ள 142 நகரங்கள் உட்பட 68 நாடுகளில் இருந்து 1500 அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு இந்த பயிற்சியை அளித்துள்ளது.

இதுகுறித்து கங்கா மருத்துவமனையின் பிளாஸ்டிக், கை மற்றும் மறுசீரமைப்பு நுண் அறுவை சிகிச்சை துறை இயக்குனர் டாக்டர் எஸ். ராஜ சபாபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மைக்ரோ வாஸ்குலர் அறுவை சிகிச்சை என்பது 1.0 மிமீ விட்டம் கொண்ட ரத்த நாளங்களை இணைப்பதை உள்ளடக்கியது. இதில்1.0மிமீ அளவுள்ள சிறிய ரத்த நாளங்களில் 4 முதல் 5 தையல்கள் போட அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த நுண்கலையை கற்பிக்க எங்கள் மருத்துவமனையில் கடந்த2000–ம்ஆண்டு இந்தமைக்ரோ சர்ஜரி லேப் ஆரம்பிக்கப்பட்டது. இதில், பயிற்சிபெறுபவர்களுக்கு ஒரு வார காலம் அறுவை சிகிச்சை அரங்கில் உருவகப்படுத்தப்பட்ட நிலையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. கங்கா மருத்துவமனையில் உள்ள மைக்ரோ லேப் உலகின் மிகச் சிறந்த ஆய்வகங்களில் ஒன்றாக பிரபலமடைந்து வருகிறது.

இந்தியாவின் 142 நகரங்கள் மற்றும் 68 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து பயிற்சிபெற்றிருப்பது கோவை நகருக்கு மிகுந்த பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த ஆய்வகம் வளரும் நாடுகளை சேர்ந்தவர்களை மட்டுமல்லாமல் வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களையும் வெகுவாக கவர்ந்துவருகிறது.

இங்குபயிற்சிபெற்ற1500 பேரில், 164 அறுவை சிகிச்சை நிபுணர்கள் இங்கிலாந்திலிருந்தும், 82 அறுவை சிகிச்சை நிபுணர்கள் அமெரிக்காவிலிருந்தும் வந்திருந்தனர். இந்த மைக்ரோ சர்ஜரி ஆய்வகத்தில் தற்போது 4 நுண்ணோக்கிகள் உள்ளன. ஒரே நேரத்தில் 4 பேர் பயிற்சிபெறலாம். இதில் முதல் 1000 பேருக்கானபயிற்சி என்ற நிலையை எட்ட சுமார் 18 ஆண்டுகள் ஆனது. ஆனால், அடுத்த 500 பேர் 5 ஆண்டுகளில் பயிற்சிபெற்றுள்ளனர்.



இந்த பயிற்சியைப் பெற்ற 4 பேரில் 3 பேர் புதுடெல்லியைச் சேர்ந்தவர்கள். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 2 பேர், புதுடெல்லியில் உள்ள டாக்டர் ஆர்.எம்.எல். மருத்துவமனையைச்சேர்ந்த ஒருவர் மற்றும் போபாலில் இருந்து ஒருவர் எனப் யிற்சிபெற்றுள்ளனர். நுண்அறுவைசிகிச்சை பயிற்சிக்காக வரும் மருத்துவ நிபுணர்களுடன், மருத்துவம் சார்ந்த பல்வேறு விஷயங்களில் பயிற்சிபெறவும் 70 நாடுகளில் இருந்து மொத்தம் 2800 அறுவை சிகிச்சை நிபுணர்கள் காங்கா மருத்துவனைக்கு வந்துள்ளனர்.

இந்த மருத்துவமனை குறுகிய கால மற்றும் நீண்ட கால பயிற்சி வகுப்புகளையும் நடத்துகிறது. பல வளரும் நாடுகளில் மக்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலம் காயங்களால் ஏற்படும் உடல்உறுப்பு பாதிப்பை மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை மூலம் சீரமைக்கும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையில் காங்கா மருத்துவமனை முக்கியபங்கு வகித்துவருகிறது.

இவ்வாறு மருத்துவர் ராஜ சபாபதி தெரிவித்தார்.

Newsletter

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சே...

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...