கோவை ரயில் நிலையத்தில் மொபைல் செயலி வழியே ஆட்டோ புக்கிங் சேவை துவக்கம்

தமிழகத்தில் முதன் முறையாகக் கோவை ரயில் நிலையத்தில் வாட்ஸ்ஆப் மற்றும் QR ஸ்கேன் வாயிலாக ஆட்டோ புக் செய்யும் 'ஊர் கேப்ஸ்' வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.


கோவை: தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ள ஆன்லைன் ஆட்டோ புக்கிங்க் வசதி மூலம் பயணிகள் தங்களுக்கான ஆட்டோவை பேரம் பேசாமல் புக் செய்து பயணிக்க இயலும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் ரயில் நிலைய சந்திப்பில் செயலி(App) வழியே ஆட்டோ புக் செய்யக்கூடிய வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான பணிகளை சேலம் கோட்டத்தை சேர்ந்த வணிகப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வந்த நிலையில், கோவையில் செயல்பட்டு வரும் 'ஊர் கேப்ஸ்' நிறுவனம் இதற்கான ஆணையைப் பெற்றுள்ளது.

கோவை ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள இரண்டாவது நுழைவாயிலில் இந்த சேவைக்கான கவுன்டர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும் பயணிகள் தங்களுக்கான ஆட்டோவை பேரம் பேசாமல் புக் செய்து பயணிக்க இயலும்.



முன்னதாக இந்த சேவையை தெற்கு ரயில்வே முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் (சேலம் கோட்டம்) ஹரிகிரிஷ்ணன் துவக்கி வைத்தார். உடன் ஊர் கேப்ஸ் தலைமை செயல் அதிகாரி மரிய ஆண்டனி உடனிருந்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...