வரி ஏய்ப்புப் புகார் - பிரபல தொழிலதிபருக்குச் சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை!

சென்னையைச் சேர்ந்த பிரபல ஹோட்டர் உரிமையாளரின் வீடு உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர்.


சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள அசோக் ரெசிடன்சி ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அண்ணா நகர் 6-அவென்யூவில் உள்ள உள்ள ஹோட்டல் உரிமையாளர் வீட்டிற்கு 4 வாகனங்களில் வந்த 10 க்கும் மேற்பட்ட வருமான வரித்தூறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வரி ஏய்ப்பு கணக்கில் வராத வருவாய் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னையில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இடங்களிலும் காஞ்சிபுரத்தில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை நடப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் முக்கிய நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மணலி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரி ஏய்ப்பு, கணக்கில் வராத பணம் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக வருமானவரித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...