நிலையான வருமானம் கிடைக்க அரசு உதவ வேண்டும் - தமிழக அரசுக்கு உடுமலை நெசவாளர்கள் கோரிக்கை

உடுமலை அடுத்த மலையாண்டிபட்டினத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில், தங்களுக்கு நிலையான வருமானம் பெறுவதற்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: நெசவு தொழிலில் நிலையான வருமானம் பெறுவதற்கு அரசு உதவ வேண்டும் என உடுமலை நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மலையாண்டிபட்டினம் ஊராட்சியில் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. நெசவு தொழிலில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் நெசவை பாரம்பரியமாக நினைத்து விட்டுக் கொடுக்காமல் ஆண்டு ஆண்டாக செய்து வருகின்றனர்.



தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இன்றைய ஆடை வடிவமைப்பிலும் இருந்தாலும் கலையும் அழகும் கைவண்ணமும் பளிச்சென கைத்தறி நெசவுகளில் தான் வெளிப்படுகின்றது. ஆண்கள் மட்டுமின்றி குடும்பத்தை சேர்ந்த அனைத்து பெண்களும் கைவினை கலையாக நெசவு தொழில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து நெசவாளர் ஓருவர் கூறியதாவது, நெசவு தொழில் 100 சதவீதம் கவனத்தோடு முழுமையாக உடல் உழைப்பை அளித்தால் மட்டுமே சேலை வடிவம் நிறைவு பெறும்.



ஒரு சேலைக்கு இரண்டு நாட்கள் என்றாலும் தொடர்ந்து அதே பணியாக அமரும்போது எங்களுக்கு பல்வேறு உடல் வலிகள் ஏற்படுவதுண்டு.

ஆனால் அவ்வாறு சிரமப்பட்டு சேலையை முடித்தும் அதற்கான வருவாய் வெகு நாட்கள் கழித்து கிடைப்பதில் எங்களுக்கு பயன் இருப்பது இல்லை. குலத்தொழிலை அடுத்து தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் நாங்கள் விரும்பினாலும் சூழல் எங்களது குழந்தைகளுக்கும் வர வேண்டாம் என்று எண்ணம் தோன்றுகிறது.

பாரம்பரியத்தை கைவிடாமல் கைத்தறி நெசவு கரம் பிடித்து வரும் நெசவாளர்கள், நிலையான வருமான பெறுவதற்கு அரசு உதவ வேண்டும். தற்சமயம் ஒரு சேலைக்கான கூலி ஆயிரத்திலிருந்து 800 ரூபாயாகவும் சில சமயம் 500 ரூபாயாகவும் குறைந்துவிட்டது. நெய்த சேலைகளும் தொடர்ந்து தேங்கிக் கொண்டு வருவதால் அதற்கான வருவாய் பெற முடியாமல் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...