திருப்பூர் பேருந்து நிலையத்தின் மத்தியில் உறக்கம் - போதை ஆசாமியை தூக்கிய பள்ளி மாணவன்!

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் செல்லும் வழியில், போதையில் தூங்கிக் கொண்டிருந்தவரை, 12-ம் வகுப்பு மாணவர் தூக்கிச் சென்று ஓரமாக படுக்க வைத்தார். பேருந்து நிலையத்தில் குடிமகன்களின் அட்டகாசத்தையும், சமூக விரோதிகளின் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை.



திருப்பூர்: திருப்பூர் பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் என புதிதாக திறக்கப்பட்டது. நகரின் மைய பகுதியில் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளதால் தினந்தோறும் லட்ச கணக்கான பொதுமக்கள், இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோல் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து மது போதை நபர்கள் மற்றும் சமூக விரோதிகளின் புகலிடமாகவும் பேருந்து நிலையம் மாறி வருகிறது. நாள் தோறும் மது அருந்திய குடிமகன்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.



நேற்று மாலை மது போதை ஆசாமி ஒருவர் மிதமிஞ்சிய போதையில் பேருந்து நிலையத்தின் நடுவே பேருந்துகள் செல்லும்பாதையில் படுத்து உறங்கி கொண்டிருந்தார்.



அவர் மீது பேருந்து மோதிவிடும் அபாயம் இருந்த நிலையிலும், பேருந்துகள் செல்வதற்கு இடையூறாக படுத்து உறங்கிய அவரை எழுப்பி அப்புறப்படுத்த பலரும் அஞ்சினர்.



அப்போது சுமை தூக்கும் பணியாளர் ஒருவர் அவரை எழுப்ப முயன்றார்.



ஆனால், அதிகப்படியான போதையில் தள்ளாடிய நபரை கண்ட 12 ம் வகுப்பு மாணவர் விரைந்து வந்து தூக்கி ஓரமாக படுக்க வைத்து விட்டு சென்றார்.



பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்துநிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்ற குடிமகன்களின் அட்டகாசத்தையும், சமூக விரோதிகளின் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் என் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...