கோவையில் சிறுவாணி இலக்கியத் திருவிழா - நடிகர் சிவக்குமார் பங்கேற்பு!

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான சிறுவாணி இலக்கியத் திருவிழா, வரும் 25, 26 ஆம் தேதிகளில் நடக்கிறது. தொடக்க விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனார்.


கோவை: தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையின் படி ஆண்டுக்கு நான்கு இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படவுள்ளது. அதன்படி,கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான சிறுவாணி இலக்கியத் திருவிழா நாளை (25.02.2023) மற்றும் நாளை மறுநாள் (26.02.2023) ஆகிய இரு தேதிகளில் நடைபெறுவதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த இலக்கிய திருவிழா பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். வரும் 25ம் தேதி நடைபெறும் தொடக்க விழாவில், திரை கலைஞர் சிவக்குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு அரங்குகளில் 40 பேச்சாளர்கள் 30 தலைப்புகளில் இலக்கிய உரையாடல்களை நிகழ்த்த உள்ளனர். இவற்றில் இலக்கிய வரலாறுகள், கதைகள், கவிதைகள், தமிழ் பண்பாடு, நிகழ்த்துகலைகள் அனைத்தும் இடம்பெற உள்ளன. மேலும், இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த இலக்கிய திருவிழாவில் 2000 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் தனித்தனி அரங்குகள் மற்றும் விழாவினை கண்டு மகிழ அனைத்து வகை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுவாணி இலக்கிய திருவிழாவில் மாணவர்கள், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கிய அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அழைப்பு விடுத்துள்ளார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...