திருப்பூரில் மூங்கில் கூடை கடையில் தீவிபத்து - பல லட்சம் மதிப்பிலான கூடைகள் எரிந்து சாம்பல்

திருப்பூர் நொய்யல் வீதி கஜலட்சுமி தியேட்டர் அருகே, பாப்பாத்தி என்பவரின் மூங்கில் கூடை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள மூங்கில் கூடைகள் எரிந்து சாம்பலானது. திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் கஜலட்சுமி தியேட்டர் அருகே ஏற்பட்ட தீ விபத்தில், மூங்கில் கூடைகள் எரிந்து நாசமாகின.

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி(55). இவர் திருப்பூர் நொய்யல் வீதி கஜலட்சுமி திரையரங்கம் அருகே மூங்கில் மூலம் செய்யப்படும் கூடைகளை பல்வேறு பகுதிகளிலிருந்து வாங்கி இங்கிருந்து விற்பனை செய்து வருகிறார். மேலும் சொந்தமாகவும், மூங்கில் கூடைகளைத் தயாரித்தும் விற்பனை செய்து வருகிறார்.

இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு இந்த மூங்கில் கூடைகளை எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வருகின்றார். இந்த நிலையில் இன்று மதியம் பாப்பாத்தி கடைக்கு வெளியே அமர்ந்து மூங்கில் கூடையைப் பின்னிக் கொண்டிருந்தார்.



அப்போது கடைக்குள் இருந்து கரும் புகை வெளியேறுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடையிலிருந்து புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினரும் உடனடியாக தண்ணீரை எடுத்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் உள்ளே மூங்கில் கூடைகள் இருந்ததால் தீ மளமளவெனப் பற்றி எரிந்தது.

இதையடுத்து தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். மேலும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் தீய எரியும் பகுதிக்குச் செல்லாதவாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.



சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



சுமார் 20 நிமிட போராட்டத்திற்குப் பிறகு தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான மூங்கில் கூடைகள் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...