கோவையில் சாரஸ் மேளா 2023 - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கோவை வ.உ.சி பூங்கா மைதானத்தில் இன்று முதல் மார்ச் 12 வரை நடைபெறும் சாரஸ் மகளிர் சுயஉதவி குழுக்களின் தேசிய அளவிலான சாரஸ் மேளா-2023 விற்பனை கண்காட்சி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.


கோவை: கோவை வ.உ.சி பூங்கா மைதானத்தில் நடைபெறும் தேசிய அளவிலான விற்பனை கண்காட்சியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

கோவை வ.உ.சி பூங்கா மைதானத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 'சாரஸ் மேளா-2023' எனும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தேசிய அளவிலான விற்பனை கண்காட்சி இன்று முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.



இக்கண்காட்சியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாநில மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அகில இந்திய அளவிலும், தமிழக அளவிலும் மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்படும் அனைத்து வகையான பொருட்களையும் சந்தைப்படுத்துதல் மற்றும் பாரம்பரிய கைவினை கலைகள், உணவுப் பொருட்களை மக்கள் பயன்படுத்த வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கமாக இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இதில் மொத்தம் 80 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, கோவா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களிலிருந்தும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அரங்கம் அமைத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 மகளிர் சுய உதவிக் குழுக்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் இக்கண்காட்சியில் தினம்தோறும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...