ரவுடி சுட்டதால் தற்காப்புக்காக போலீசார் சுட வேண்டியதாகிவிட்டது..! - கோவை துணை ஆணையர் சந்தீஸ் விளக்கம்

கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு பகுதியில் இன்று காலை கைதி- போலீசார் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தை மாநகர காவல்துறை துணை ஆணையர் சந்தீஸ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ரவுடி சஞ்சய் ராஜா மறைத்து வைத்திருந்த துப்பாக்கி, நாட்டு துப்பாக்கி போல இருப்பதாக துணை ஆணையர் சந்தீஸ் தெரிவித்தார்.



கோவை: கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு பகுதியில் இன்று காலை கைதி- போலீசார் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தை மாநகர காவல்துறை துணை ஆணையர் சந்தீஸ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



இன்று காலை சஞ்சய் ராஜாவை கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை இந்த பகுதிக்கு அழைத்து வந்தனர். சஞ்சய்ராஜாவிடம் இரண்டு துப்பாக்கிகள் இருப்பதாக விசாரணையில் சொல்லியிருந்தார். ஏற்கனவே ஒரு துப்பாக்கி சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டாவது துப்பாக்கியை பறிமுதல் செய்ய இங்கே அழைத்து வந்திந்தனர்.

சரவணம்பட்டி பகுதியில்தான் சஞ்சய் ராஜா தங்கி இருப்பார். இந்த பகுதியில் மறைத்து வைத்திருந்ததாக சொன்னதால் அந்தத் துப்பாக்கியை பறிமுதல் செய்ய அவரை அழைத்து வந்தனர். இந்த துப்பாக்கி நாட்டுத் துப்பாக்கியைப்போல இருக்கிறது.



மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தவுடன் சுடத் துவங்கி விட்டார்.



தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் சுட்டதில் சஞ்சய்ராஜா காலில் குண்டு பாய்ந்தது.



அவர் பத்து நிமிடத்தில் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லபட்டார். தற்போது நல்ல நிலையில் இருக்கிறார். போலீசாரை குறிவைத்து சுட்டார். நல்வாய்ப்பாக போலீசார் தப்பி விட்டனர்.



சஞ்சய் ராஜா மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் இருக்கிறது.

துப்பாக்கி எங்கு வாங்கினார் என்பது குறித்து விசாரித்த பொழுது பீகார், ஒரிசா என சொல்லியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். கோவையில் துப்பாக்கி கலாச்சாரம் கிடையாது. இவர் அதை செய்து வந்து இருக்கிறார்.

இந்த துப்பாக்கி நாட்டு துப்பாக்கியை போலவே இருக்கிறது. இன்னொரு துப்பாக்கி சற்று மாறுதலாக இருக்கிறது. அதை ஆய்வுக்கு அனுப்பினால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும். இவை சட்ட விரோதமான துப்பாக்கிகள். துப்பாக்கியில் எவ்வளவு குண்டுகள் இருக்கிறது என்பது ஆய்வுக்கு பின்னரே தெரியவரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...