கோவை- அவிநாசி சாலையில் சுரங்க பாதை மூடல்

கோவை-அவிநாசி சாலையில் உள்ள பாதாள சுரங்க பாதை பயன்பாட்டில் இல்லாததால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியதையடுத்து அந்த பாதையை மாநகராட்சி அதிகாரிகள் மூடினர்.


கோவை: அவிநாசி சாலையில் உள்ள பாதாள சுரங்க பாதை பயன்பாட்டில் இல்லாததால் மாநகராட்சி அதிகாரிகள் மூடினர்.

கோவை-அவினாசி சாலையில் மேம்பாலத்தின் கீழ் பொதுமக்கள் ரவுண்டானா பகுதியிலிருந்து புரூக்பாண்ட் சாலைக்குச் செல்ல தனி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதையை, பொதுமக்கள் நீண்ட நாட்களாகப் பயன்படுத்தாமல் விட்டதால், காலப்போக்கில், சமூக விரோதிகள் இந்த சுரங்கப்பாதையைத் திறந்தவெளி கழிப்பிடமாகவும், மது அருந்துவதற்காகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.



இந்த பாதையை அடைக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் இந்த பகுதியில் பூங்கா அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் இந்த பாதையை அடைத்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மேம்பாலம் சுரங்கப்பாதையின் ரவுண்டானா பகுதியில் பொதுமக்கள் கடக்கத் தனிப் பாதை அமைக்கப்பட்டது. ஆனால் பின்னர் பொதுமக்கள் பயன்பாடு குறைவாக இருந்ததால் மூடப்பட்டது. இந்த பாதையில் அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...