உடுமலை அருகே வீடு தீப்பிடித்து எரிந்து சேதம் - பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்

உடுமலை அருகேயுள்ள சடையகவுண்டன் புதூரில் மின்கசிவு காரணமாக வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை எரிந்து நாசமானது.


திருப்பூர்: உடுமலை அருகே மின்கசிவு காரணமாக வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்து நாசமானது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அந்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட சடைய கவுண்டன் புதூரில் லட்சுமணன் (55) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் லட்சுமணன் குடும்பத்துடன் வெளியூரில் உள்ள கோவில் திருவிழாவுக்குச் சென்றார்.



இன்று காலையில் திரும்பி வந்து பார்த்த போது வீடு முழுவதும் எரிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.



பின்னர் உள்ளே சென்று பார்த்த பீரோவில் வைத்திருந்த வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள், இரு சக்கர நான்கு சக்கர வாகனம், ரூ.1.50 லட்சம் ரொக்கம் ஆகியவை எரிந்து சேதமானது.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இருப்பினும் உடுமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...