வாயில்லா ஜீவன்களுக்காக கோவை மாநகர காவல்துறை எடுத்த முயற்சி!

கோவை மாநகர காவல்துறை மற்றும் தனியார் தன்னார்வ அமைப்புகள் இணைந்து காவல் நிலையங்களின் மேற்கூரைகளில் பறவைகளுக்குத் தண்ணீர் வைப்பதற்கு ஏதுவான மண் குவளைகள் வழங்கும் நிகழ்வு, காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மண் குவளைகளை காவல் ஆய்வாளர்களிடம், ஆணையர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.



கோவை: கோடை காலத்தையொட்டி காவல் நிலைய மேற்கூரைகளில் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதற்கான மண் மண் குவளைகளை காவல் ஆய்வாளர்களிடம், ஆணையர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.



கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தனியார் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து காவல் நிலையத்தின் மேற்கூறையில் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதற்கு ஏதுவான மண் குவளைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட பீப்பிள் ஃபார் கேட்டில் இன் இந்தியா, ராயல் செயின், நேச்சர் அனிமல் கன்வரன்சி, என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மாநகர போலீசாருக்கான 100 மண் குவளைகளை வழங்கினர்.



மேலும் இந்த அமைப்பினர் சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், சென்னை, திருப்பூர், உள்ளிட்ட பகுதிகளில் வளர்ப்பு விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பொது இடங்களில் தண்ணீர் குடிப்பதற்கான மண் குவளைகள் வைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர பகுதியில் பறவைகளுக்கு கோடைக்காலத்தில் தண்ணீர் வைப்பதற்கான திட்டத்தை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கோடைக்காலத்தை முன்னிட்டு இந்த பணியைச் செய்வதாகவும், பறவைகளுக்கும் வளர்ப்பு விலங்குகளுக்கும் தண்ணீர் அத்தியாவசியம் என தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...