கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கோவை மத்திய சிறை கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மத்திய சிறைச்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால், முதற்கட்டமாக சிறை வளாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேல்சிகிச்சை தேவைப்படும் நிலையில் அவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, கைதிகளுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு வார்டில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள சவுரிகாடு, வடகவுஞ்சி கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற மணிகண்டன் (55), கடந்த 2016-ஆம் ஆண்டு பெருந்துறையில் நடைபெற்ற கொலை வழக்கில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையில் இருந்த அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, சிறை அதிகாரிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கடந்த சில நாட்களாக போலீஸ் பாதுகாப்புடன் மணிகண்டனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோவை மத்திய சிறைச்சாலையின் சிறை வார்டன் தாமரைக்கனி அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார், கைதி உயிரிழந்ததற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.