உடுமலையில் தீப்பிடித்து எரிந்த லாரி - போலீசார் தீவிர விசாரணை!

உடுமலை அருகே கல்லாபுரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மணிகண்டன் என்பவரின் லாரியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். பேட்டரி பவர் ஒயரில் ஏற்பட்ட கசிவின் காரணமாக லாரியில் தீப்பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கல்லாபுரம் வேல்நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் மணிகண்டன் (வயது 29). இவர் தனக்குச் சொந்தமான லாரியில் அவரே டிரைவராக இருந்து ஓட்டியும் வந்தார்.

இந்த நிலையில் கல்லாபுரத்திலிருந்து மக்காச்சோள மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டு உடுமலை வெஞ்சமடை பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். அங்கு மக்காச்சோள மூட்டைகளை இறக்கி விட்டு அந்த பகுதிக்கு அருகில் உள்ள சுந்தர்நகர் பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு கல்லாபுரம் சென்று விட்டார்.



இந்தநிலையில் அதிகாலை லாரியில் திடீரென்று தீப்பிடித்தது. சற்று நேரத்தில் லாரி முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து பலத்த போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனர். அதற்குள் லாரி முழுவதும் எரிந்து எலும்புக்கூடுபோல மாறியது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த உடுமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பேட்டரி பவர் ஒயரில் ஏற்பட்ட கசிவின் காரணமாக லாரியில் தீப்பிடித்திருக்கலாம் என்று தெரிய வந்திருக்கிறது. சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...