திருப்பூர் அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடப்பது உறுதி - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமையவுள்ள, புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.2கோடி நிதியுதவி வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடப்பது உறுதி என்றார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடப்பது உறுதி என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் ரோட்டரி சங்கங்கள், பொது அமைப்புகள் மற்றும் திருப்பூர் மாநகராட்சி இணைந்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசின் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் ரூ.90கோடியில் இந்தியாவிலேயே அதிநவீன மருத்துவ கருவிகளுடன் அமைய உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.2 கோடி நிதியுதவி வழங்கும் விழா இன்று பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்வில் ECGC நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் செந்தில்நாதன், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி சங்கத் தலைவர் சக்திவேல் முன்னிலையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைவர் முருகேசன் வழங்கினர்.



இந்நிகழ்விற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது, சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையை விட அதிநவீன கருவிகளுடன் திருப்பூரில் புதிய மருத்துவமனை அமைய உள்ளது. திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு இந்த மருத்துவமனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும். தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேலும் தமிழக பட்ஜெட் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறித்து இப்போது சொன்னால் பட்ஜெட் ரகசியம் வெளியாகிவிடும் எனவே நாளை பொறுத்திருந்து பாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...