உலக தண்ணீர் தினம் - சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கோவை ஆட்சியர் பங்கேற்பு

கோவை மாவட்டம் கணியூரில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே வரும் காலத்தில் அனைவருக்கும் சுத்தமான தண்ணீர் கொடுப்பதற்கான முயற்சி செய்ய முடியும் என்றார்.


கோவை: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கணியூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கணியூர் ஊராட்சி தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமர் பாடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களிடையே பேசினார்.



அப்போது அவர் பேசியதாவது:

தண்ணீர் பிரச்சனை எதிர்காலத்தில் இல்லாமல் இருக்க அதனை மக்கள் இயக்கமாக கொண்டு சென்று ஒவ்வொருவரும் பங்குதாரராக மாறி தண்ணீரின் முக்கியத்துவம் தெரிந்து கொள்ள வேண்டும்.

திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே வரும் காலத்தில் அனைவருக்கும் சுத்தமான தண்ணீர் கொடுப்பதற்கான முயற்சி செய்ய முடியும். அரசின் பல்வேறு திட்டங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். கோவை மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் ஏற்கனவே கூறிய திட்டங்களுக்கு திட்டமிட்ட தொகை குறைவாக உள்ளது.

இதை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. தண்ணீர் பிரச்சனைக்கு முக்கிய காரணம் திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் மேலாண்மை. இதை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் நிலத்தடி நீரில் கழிவு நீர் கலப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

மேலும் பொதுமக்கள் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து தூய்மை காவலரிடம் வழங்க வேண்டும். தரம் பிரித்து வழங்கி சரியான மேலாண்மை செய்தால் மட்டுமே அந்த குப்பைகள் நீர்வழி பாதைக்கு வராமல் செய்ய முடியும்.

பிளாஸ்டிக் பொருட்களை முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தமாக தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...