வால்பாறையில் சி.பி.எஸ் திட்டத்தை ரத்து செய்தல், ஊதிய முரண்பாட்டை களைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: வால்பாறையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சுமார் 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வால்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சி.பி.எஸ் திட்டத்தை ரத்து செய்தல், ஊதிய முரண்பாட்டை களைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.