உடுமலை நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசின் வியாபார சான்று வழங்கல்!

உடுமலை நகராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், அவர்களுக்கு மத்திய அரசின் வியாபார சான்று இன்று வழங்கப்பட்டன. இந்த சான்றுகள் பெற்ற வியாபாரிகள் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் நகராட்சி அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை நகராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசின் வியாபார சான்று வழங்கப்பட்டன.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த சாலையோர வியாபாரிகளுக்கான கணக்கெடுப்பு பணிகளை முடிந்த நிலையில் மத்திய அரசால் வழங்கப்பட்ட வியாபார சான்று அனைவருக்கும் இன்று வழங்கப்பட்டது.

கணக்கெடுப்பில் அனைவருக்கும் நகராட்சி மூலம் புதிதாக அடையாள அட்டை மற்றும் வியாபார சான்று வழங்கப்பட உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள சாலையோர வியாபாரிகளின் கடைகள் அகற்றப்பட்டுள்ளன.

அகற்றப்பட்ட கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வெங்கடகிருஷ்ணா வியாபார மண்டலங்களாக அறிவிக்கப்படும். பழைய நகராட்சி பள்ளி வளாகத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு வியாபார மண்டலம் அமைக்கப்பட உள்ளது. சாலையோர வியாபாரிகள் (வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் விற்பனை ஒழுங்குமுறை) துணை விதிகளின்படி வியாபார மண்டலங்கள் அறிவிக்கப்பட உள்ளது.

சாலையோர வியாபாரிகளுக்கு வியாபார மண்டலங்கள் அமைக்கப்படும் இடங்களின் அரசு வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் சதுர அடிக்கான ஆண்டு கட்டணம் மற்றும் குப்பைகள் அகற்றுதல் போன்ற பணிகளுக்கு மாத பராமரிப்பு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்படும்.

மேலும் வியாபார சான்று வழங்கப்பட்ட இடத்திற்கு மாறாகவும். போக்குவரத்திற்கு இடையூறாகவும் வியாபாரம் செய்யும் பட்சத்தில் வியாபார சான்று, நகர வியாபார குழுவால் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Newsletter

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...