உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 41 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கல்

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அபெக்ஸ் ஸ்கில் டெவலப்மென்ட் கார்பரேசன் லிட் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு 240 மணி நேரம் வேலைவாய்ப்புப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற உடுமலை அரசு கலைக்கல்லூரியைச் சேர்ந்த 41 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 41 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு "அபெக்ஸ் ஸ்கில் டெவலப்மென்ட் கார்பரேசன் லிட்" மூலம் கல்லூரி மாணவர்களுக்கு 240 மணி நேரம் வேலைவாய்ப்புப் பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியில் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை இறுதியாண்டு படிக்கும் 49 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதில் 3 தனியார் நிறுவனங்கள் மூலம் 41 பேர் பணி வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கான ஊதியத்தில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த பணி நியமன ஆணையை நேர்முகத்தேர்வு ஒருங்கிணைப்பாளர் தினேஷ் முன்னிலையில் கல்லூரியின் முதல்வர் கல்யாணி வழங்கினார்.

கல்லூரியின் நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வணிகவியல்துறைப் பேராசிரியர் கதிர்வேலு நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

Newsletter

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...