அன்னூர் பகுதியில் போதை பொருள் விற்பனை - 2 பேர் கைது

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் உயர் ரக போதைப்பொருளான மெத்தபெட்டமைனை வைத்திருந்த ஜின்சன் (29), ஷான்சன் (34) ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்து ரூ.24ஆயிரம் மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.


கோவை: அன்னூர் பகுதியில் போதைபொருள் வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டத்தை சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு காவல் கண்காணிப்பாளர பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் இன்று அன்னூர் பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோவை மாவட்ட தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான அன்னூர் பசூர் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது உயர் ரக போதை பொருளான மெத்தபெட்டமைன் வைத்திருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜாய் மகன் ஜின்சன் (29) மற்றும் குரியோஸ் மகன் ஷான்சன் (34) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.24,000 மதிப்புள்ள 8 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் மற்றும் பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் எனவும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...