அணையா அடுப்பு மூலம் ஸஹர் உணவு விநியோகம் - கோவை ஜீவசாந்தி அறக்கட்டளைக்கு பாராட்டு

கோவையில் ஆதரவற்ற ஏழை மக்களின் பசியை போக்கும் நோக்கத்தில் ஜீவசாந்தி அறக்கட்டளை சார்பாக தொடங்கப்பட்டுள்ள அணையா அடுப்பு மூலம் ரமலான் மாத காலை உணவான ஸஹர் உணவை விநியோகிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.



கோவை: கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜீவசாந்தி அறக்கட்டளையினர் ஆதரவில்லாமல் உயிரிழந்த உடல்களை அடக்கம் செய்வது, இலவச ஆம்புலன்ஸ் சேவை என பல்வேறு சமூக பணிகளை கடந்த பதினைந்து வருடங்களாக செய்து வருகின்றனர்.

கடந்த வாரம், அணையா அடுப்பு எனும் சமுதாய சமையற்கூடத்தை திறந்து, அதன்மூலம் கோவை அரசு மருத்துவமனை, இரயில் நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதியில் இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு துவங்கியதை தொடர்ந்து, இன்னும் கூடுதலாக இஸ்லாமியர்கள் நோன்பு வைப்பதற்கு முன்னதாக உட்கொள்ளும் ஸஹர் உணவான காலை உணவை வழங்கும் பணியை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இதற்கான பணிகளை நேரில் பார்வையிட்ட தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி, ஜீவசாந்தி அறக்கட்டளையின் நிறுவனர் சலீம் மற்றும் நிர்வாகிகளை பாராட்டினார்.



இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து கோவையில் இஸ்லாமியர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வசித்து வருகின்றனர். இதில், இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பை கருத்தில் கொண்டு அணையா அடுப்பின் வாயிலாக ஸஹர் உணவை அவர்களது இருப்பிடத்திற்கே சென்று வழங்குவது உள்ளபடியே பாராட்டுக்குரியது.

கரும்புகடை சேரன் நகர் பகுதியில் ஆதரவற்ற ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் விதமாக ஜீவசாந்தி அறக்கட்டளையினர் அணையா அடுப்பு துவங்கியுள்ள நிலையில், அதே பகுதியில் புற்றுநோய் நல மையத்திற்கான பணிகளும் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...