காவல் நிலையம் வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள்..! - கூடுதல் டிஜிபி சங்கர் அறிவுரை

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுடன், சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் ஆலோசனை நடத்தினார். குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பது, வழக்குகள் சம்பந்தமான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்து அறிவுறுத்தினார்.


கோவை: காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள போலீசாருக்கு கூடுதல் டிஜிபி அறிவுரை வழங்கினார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்திற்கு சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் தலைமை தாங்கினார். கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் இன்று ஆலோசனை நடத்தினார்.

குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பது, வழக்குகள் சம்பந்தமான குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்வது, ரவுடிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது உள்ளிட்ட சட்டம்,ஒழுங்கு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு சட்டம், ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி சங்கர் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

பிரதமர் மோடி நாளை மறுநாள் முதுமலைக்கு வருகிறார். இதனையொட்டி நீலகிரி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், என்னென்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்தும் போலீஸ் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி ஆலோசித்து பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், கோவை எஸ்பி பத்ரி நாராயணன், ஈரோடு எஸ்பி சசிகுமார், நீலகிரி எஸ்பி பிரபாகரன், திருப்பூர் எஸ்பி ஷசாங் சாய் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், கோவை, திருப்பூர் மாவட்ட காவல் நிலையங்களில் வரவேற்பாளராக இருக்கும் காவலர்களையும் டிஜிபி சந்தித்தார்.

அப்போது அவர்களிடம் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களை காக்க வைக்க கூடாது. அவர்கள் போலீஸ் நிலையங்களுக்கு வந்ததும், என்ன பிரச்சினை என கேட்டு அவர்களின் குறைகளை கேட்க வேண்டும். குறைகளை கேட்டு உடனே அதனை நிவர்த்தி செய்ய வேண்டும்.

மேலும், காவல் நிலையங்களுக்கு வரும் மக்களிடம் மிகவும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். பின்னர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...