திருப்பூரில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்!

திருப்பூரில் குடிநீர் வசதிகள் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூரில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் சார்பில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

பட்டுக்கோட்டையார் நகரின் 8 வீதிகளிலும் உள்ள குடிநீர் குழாய் பழுதாகியுள்ளன. புதிய குடிநீர் குழாய் பதித்து தர வேண்டும். 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். சாலைகளை புதிதாக செப்பனிட வேண்டும். வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மாதம் ஒருமுறை மருத்துவ முகாம் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.



அப்போது, மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து குடிநீர் பற்றாக்குறை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மற்ற கோரிக்கைகள் படிப்படியாக சீரமைக்கப்படும் என உறுதியளித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...