கோவை அருகே கஞ்சா பறிமுதல் - சிங்காநல்லூரை சேர்ந்த இளைஞர் கைது!

கோவையில் சூலூர் போலீசார் நடத்திய வாகனசோதனையில், இருசக்கர வாகனம் மூலம் கஞ்சாவை கடத்திவந்து விற்பனை செய்ய முயன்ற சூரிய பிரகாஷ் என்ற இளைஞர் பிடிபட்டார். அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 1600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பா பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில், சூலூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சூலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர், இருகூர் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.



அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் சூரிய பிரகாஷ் (வயது19) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.600 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சாவை கொண்டு வர பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, நீதிமன்ற காவலில் அடைந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...