‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிட கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மண்டியிட்டு மனு!

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவும், திரையரங்குகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட கோரியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் பதாகைகளை ஏந்தியபடி மண்டியிட்டு மனு அளித்தனர்.


கோவை: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிடக் கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மனு அளித்தனர்.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. ஆனால் இத்திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் வெளியானதை தொடர்ந்து இத்திரைப்படம் ஒரே நாள் மட்டுமே திரையரங்கில் ஓடியது. குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டும் இரண்டு நாட்கள் ஓடியது.



இதனையடுத்து பாஜக உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் இந்த திரைப்படத்தை அரசு உரிய பாதுகாப்பு வழங்கி திரையிட வேண்டும் என வலியுறுத்தினர். எனினும் திரைப்படம் எந்த திரையரங்குகளிலும் திரையிடப்படவில்லை.



இந்நிலையில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தலைமையில், அந்த இயக்கத்தினர், இத்திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவும் திரையரங்குகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட கோரியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதாகைகளை ஏந்தி மண்டியிட்டு மனு அளித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...