கோவையில் கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் - மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு!

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் இன்று முதல் 26 ஆம் தேதி வரை நடக்கிறது. ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்த முகாமை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.


கோவை: ஆர்.எஸ்.புரத்தில் கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் இன்று முதல் 26 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், நடைபெறும் இந்த முகாமை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.



2023-24 கல்வியாண்டில் 8ம் வகுப்பு 9ம் வகுப்பு பயிலும் அரசு மாநகராட்சி பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.



இந்த பயிற்சி முகாமில் பானை ஓவியம், மணல் சிற்பம், காகித வேலைப்பாடுகள், களிமண் சிற்பம், மெழுகு சிற்பம் போன்ற பல்வேறு வகையான கலைகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.



இந்த தொடக்க நிகழ்வில் மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, கல்வி குழு தலைவர் மாலதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...