ஜல்லிக்கட்டு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - கார்த்திகேய சிவசேனாதிபதி வரவேற்பு!

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சேனாதிபதி கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக அறங்காவலரும் , அயலகத் தமிழர் நலவாரிய தலைவருமான கார்த்திகேய சிவ சேனாதிபதி தெரிவித்துள்ளார்.


கோவை: ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக டெல்லி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை இல்லை எனவும் தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டம் ரத்து செய்யப்படாது எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து பேசிய காங்கேயம் சேனாதிபதி கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக அறங்காவலரும், அயலக தமிழர் நல வாரியத் தலைவருமான கார்த்திகேய சிவ சேனாதிபதி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக கலாச்சாரத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இதற்காக எத்தனையோபேர் சட்டரீதியாக போராடி வந்தனர். அதில் சிறிய அளவு நானும் பங்கு செலுத்தி இருப்பது தற்போது மகிழ்ச்சி அளிக்கிறது. 2006 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியும்,

2021 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு. க. ஸ்டாலினும் தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பான சட்ட விவரங்களை கேட்டு அதில் வெற்றி பெறத் தேவையான வாதங்களை முன்வைத்தனர். தற்போது தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...