திருப்பூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை - 2 ஆயிரம் வாழை மரங்களும் நாசம்!

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. திருப்பூர் அடுத்த மணியக்காரம்பாளையத்தில் வீசிய சூறைக்காற்று காரணமாக கணேசன் என்பவரின் தோட்டத்தில் 4 ஏக்கரில் பயிரிட்டிருந்த 2 ஆயிரம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியும் நிலவியது. மழையின் போது பல்வேறு பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றும் வீசியது.

இந்நிலையில் மாவட்டத்தில் காலை 7 மணி நிலவரப்படி திருப்பூர் வடக்கு பகுதியில் 2 மி.மீ. குமார் நகர்ப் பகுதியில் 1 மி.மீ, திருப்பூர் தெற்கு பகுதியில் 13 மி.மீ, பல்லடம் ரோடு பகுதியில் 2 மி.மீ, ஊத்துக்குளியில் 12 மி.மீ, மடத்துக்குளத்தில் 5 மி.மீ, குண்டடத்தில் 6 மி.மீ, உப்பாறு அணைப்பகுதியில் 17 மி.மீ, உடுமலையில் 14.10 மீ.மீ, அமராவதி அணைப்பகுதியில் 16 மி.மீ, பல்லடத்தில் 3 மி.மீ என மொத்தம் 91.10 மி.மீட்டர் மழைப் பதிவானது.

இதன் சராசரி 4.55 மி.மீட்டர் ஆகும். இதற்கிடையே திருப்பூரை சேர்ந்த கணேசன் (59) என்பவர் நல்லூர் மணியக்காரம்பாளையத்தில் 4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் வாழை பயிரிட்டிருந்தார். அனைத்து வாழைகளும் நன்கு விளைந்து குழை தள்ளிய நிலையிலிருந்தன.



சூறாவளிக் காற்றின் காரணமாக 4 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் வாழை மரங்களும் முறிந்து நாசமாகின.



இதன் மதிப்பு ரூ.14 லட்சம் எனத் தெரிவித்த கணேசன், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...