வருமான வரித்துறை அதிகாரிகள் மீது ஆளுங்கட்சியினர் தாக்குதல் நடத்துவது ஏற்புடையது அல்ல - ஜி.கே.வாசன் கண்டனம்!

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், வருமான வரித்துறை சோதனை என்பது புதிதல்ல, வழக்கமான ஒன்றுதான். ஆளுங்கட்சியினர் அதிகாரிகள் மீது தாக்குதலில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல என கண்டனம் தெரிவித்தார்.



திருப்பூர்: வருமான வரித்துறை அதிகாரிகள் மீது ஆளுங்கட்சியினர் தாக்குதலில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் உள்ள கூப்பிடு பிள்ளையார் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வருகை தந்தார். 

சாமி தரிசனம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, 



வருமான வரித்துறை சோதனை என்பது புதிதல்ல, வழக்கமான ஒன்றுதான். ஆளுங்கட்சியினர் அதிகாரிகள் மீது தாக்குதலில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல. 

ஆளுங்கட்சியினரின் பணபலமும் அதிகார பலமும் வெளிவருவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதாரங்களின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை தடுக்கவோ அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. உண்மை நிலை என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முதல்வரின் மலேசியா சுற்றுப்பயணம் வெறும் விளம்பரத்திற்காக மட்டும் இருக்கக் கூடாது. தமிழகத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் இருக்க வேண்டும். காரணம்பேட்டை அருகே பத்தாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் உள்ள பேருந்து நிலையத்தை ஜவுளி பூங்காவாக மாற்றி அமைக்க வேண்டும்.

முறையான சட்ட விதிகளை பின்பற்றி இயங்கும் கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கினால் மட்டுமே கட்டுமான தொழில் வளர்ச்சி அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...